நீங்கள் ZOOM பயன்படுத்துபவரா? கவனம்! ஹேக்கர்கள் கைவரிசை!

14 April 2020 தொழில்நுட்பம்
zoomhacked.jpg

உலகம் முழுவதும் தற்பொழுது சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் விஷயம் என்றால், அது ZOOM வலைதளமே.

உலகளவில் பிரசித்திப் பெற்ற வலைதளமான ZOOM வலைதளத்தின் மூலம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். இப்படி பயன்படுத்தப்பட்ட ZOOM வலைதளமானது, ஹேக்கர்கள் மூலம் ஹேக் செய்யப்பட்டது. மேலும், ஹேக் செய்யப்பட்ட வலைதளத்தினைப் பயன்படுத்தி, ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள ஹேக்கர்கள் ஒளிபரப்பினர்.

இதனால், சிங்கப்பூர் அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அந்த வலைதளத்திற்கு சிங்கப்பூரில் தடையும் விதித்தது. இந்நிலையில், இந்த வலைதளம் குறித்த பதற வைக்கும் புதிய செய்தியும் வெளியாகி வருகின்றன. இந்த வலைதளத்தினை ஹேக் செய்த ஹேக்கர்கள், அதனைப் பயன்படுத்திய பயனர்களின் தகவல்களை டீப் வெப்பில் விற்றுள்ளனர். இந்த வலைளதளத்தின் தினமும், 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

இதில் கணக்கு வைத்துள்ள ஐந்து லட்சம் பயனர்களின் தகவல்களானது, டீப் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளது. மிகவும் குறைந்த விலைக்கே இந்தத் தகவல்கள் விற்கப்பட்டு உள்ளன. இதனைப் பல ஹேக்கர்களும், விரும்பி வாங்கி வருகின்றனர். இந்தத் தகவலானது, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மொத்தத் தகவல்களையும் 30,000 டாலர்களுக்கு வாங்கும் வகையில், விற்கப்பட்டு உள்ளன.

இது குறித்து ZOOM நிறுவனம், தற்பொழுது புதிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி, அடுத்த 90 நாட்களுக்கு செயல்பாட்டினை முடக்கி உள்ளது. மேலும், இதன் வடிவம், அளவு, பயனர்கள் பாதுகாப்பு என பல்வேறு விஷயங்களை மேம்படுத்த உள்ளதாகவும் ZOOM நிறுவனம் தெரிவித்துள்ளது.

HOT NEWS