சக்ரா திரைவிமர்சனம்!

19 February 2021 சினிமா
chakrareview.jpg

இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், விஷால் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் சக்ரா. இப்படத்தில், ரெஜினா, ஷ்ரத்தா, கே ஆர் விஜயா, மனோ பாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

படம் முழுக்க, விறுவிறுப்பாக செல்கின்றது என்பதை முதலிலேயே சொல்ல வேண்டும். ஒரு இடத்திலும் நம்மால் தொய்வினைக் காண இயலாது. பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், படம் போகின்ற போக்கில் அவைக் காணாமல் போகின்றன. இராணுவத்தில் பணியாற்றுகின்றார் விஷால். அவருடைய தந்தை இராணுவத்தில் உயர்ந்த விருதாகப் பார்க்கப்படும் சக்ரா பதக்கம் பெற்றவர். சுதந்திரத் தினத்தன்று, அந்தப் பதக்கத்துடன் சேர்த்து, அங்கிருந்த 50 வீடுகளில் திருடர்கள் தங்களுடையக் கைவரிசையினைக் காட்டுகின்றனர்.

போகின்ற போக்கில், விஷாலின் பாட்டியினையும் தாக்கி விட்டுச் செல்கின்றனர். இதனை அறிந்த விஷால், சென்னை திரும்புகின்றார். இந்த வழக்கினை, விஷாலின் தோழி ஷ்ரத்தா விசாரிக்கின்றார் என்பதை அறிந்த விஷால், போலீசாருடன் இணைந்து திருடர்களைத் தேடுகின்றார். திருடர்களைப் பிடித்தாரா, குற்றவாளிகளுக்கு பின்னால் இருப்பது யார், என்ன நடக்கின்றது என்பது தான் சக்ரா படத்தின் க்ளைமாக்ஸ். நீண்ட நாட்களுக்கு பிறகு, விஷால் படம் வெளியாகி இருக்கின்றது.

அந்த எதிர்பார்ப்பினை இந்தப் படம் நிறைவேற்றி இருக்கின்றது. கச்சிதமான நடிகர்கள் தேர்வு, சரியான பின்னணி இசை, திறமையான ஒளிப்பதிவு என சக்ரா மிரட்டுகின்றது. இன்றைய டிஜிட்டல் உலகில் உள்ள சிக்கல்களை எடுத்துக் கூறும் நல்லதொரு படமாக இப்படம் உள்ளது. மொத்தத்தில் சக்ரா திரைப்படம் சுழற்சி.

ரேட்டிங் 3.2/5

HOT NEWS