இந்த ஆண்டிற்கான புதிய வைரஸ் நோய் Disease X! 2021லும் லாக்டவுனா?

07 January 2021 அமானுஷ்யம்
newdiseasex.jpg

புதியதாக Disease X என்ற வைரஸ் ஒன்று உருவாகி இருப்பதாகவும், அதனால் இந்த 2021ம் ஆண்டும் லாக்டவுன் நீடிக்கும் அபாயம் இருப்பதாகவும், உலக விஞ்ஞானிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

நாம் வாழும் இந்த உலகில் சுமார் 1.67 மில்லியன் வைரஸ்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதில், 236 வைரஸ்கள் மட்டுமே மனிதர்களைத் தாக்கும் எனக் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சூழலில், 99.99% வைரஸ்கள் எப்படிப்பட்டது என்பது பற்றி யாருக்கும் தெரியாது. தொடர்ந்து பருவநிலையில் ஏற்படுகின்ற மாற்றம், வன விலங்குகள் மரணம், காடுகள் அழிப்பு, வெப்பநிலை அதிகரிப்பு உள்ளிட்டக் காரணங்களால், புதிய புதிய வைரஸ்களின் தொல்லையானது ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து கொரோனா வைரஸானது பரவ ஆரம்பித்தது. தற்பொழுது வரை அந்த வைரஸிற்கு பெரிய அளவில் முடிவு கட்டப்படவே இல்லை. இந்தியா உள்ளிட்டப் பெரும்பாலான நாடுகளில், தடுப்பூசிகளானது பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில், புதியதாக Disease X என்ற வைரஸ் பரவும் அபாயமானது கண்டறியப்பட்டு உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றாக காங்கோ நாட்டில், பெண் ஒருவருக்கு தீவிர வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழப்பம் அடைந்தனர். வயிற்றுப் போக்குடன், காய்ச்சலும் இருந்ததால் இவருக்கு எபோலா தொற்று இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு எபோலா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், அவருக்கு எபோலா தொற்று இல்லை எனவும், கொரோனா தொற்றும் இல்லை எனவும் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, பெயரிடப்படாத இந்த வைரஸிற்கு Disease X எனப் பெயர் வைத்துள்ளனர். எப்பொழுதும், பெயரிடப்படாத வைரஸிற்கும், நோய்க்கும் Disease X என்றேப் பெயர் வைப்பார்கள். இந்த வைரஸானது உலகம் முழுக்கப் பரவும் தன்மை உடையது எனவும், இதனால் பெரிய ஆபத்து ஏற்படலாம் எனவும் எபோலா வைரஸினை 1976ம் ஆண்டுக் கண்டுபிடித்த பேராசிரியர் ஜான் லாக் மெயம்பே கூறியுள்ளார்.

இந்த வைரஸ் பரவ ஆரம்பித்தால், கட்டாயம் 2021ம் ஆண்டும் லாக்டவுன் தான் இருக்கும் எனவும், மனிதர்கள் அனைத்து விஷயத்திற்கும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதுக் கட்டாயம் எனவும் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS