மெக்சிகோ பகுதியில் கும்பலாக சென்ற பறக்கும் தட்டுக்கள்!

20 September 2020 அமானுஷ்யம்
ufosigtings.jpg

மெக்சிகோவின் விமானப் படையின் அதிகாரிகள், கும்பலாகப் பறந்த வேற்றுக்கிரகத் தட்டுக்களை புகைப்படம் எடுத்துள்ள சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு, மெக்சிகோவின் ஏர் போர்ஸ் பிரிவினைச் சேர்ந்த சி-26 விமானமானது போதைப் பொருட்களை எங்கு விளைவிக்கின்றார்கள் என, தேடும் பணியில் ஈடுபட்டது. அப்பொழுது, புவியில் இருந்து 11,500 அடி உயரத்தில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்த பொழுது திடீரென்று ஒரு புகைமூட்டம் போல, மேகத்தில் இருந்து ஒரு விமானக் கூட்டம் தனியாகப் பறந்து வந்துள்ளது.

அதனைப் பார்த்த விமானத்தில் இருந்து வந்தப் பயணிகள், அதனை பின் தொடர முயற்சித்து உள்ளனர். அப்பொழுது அவர்களுடைய விமானத்தின் வேகம் 180 கிலோமீட்டர் என்ற அளவில் இருந்துள்ளது. அந்த வேகத்தில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சுமார், 540 கிலோமீட்டர் வேகத்தில் அந்த விமானங்கள் பறந்து மேகத்தில் மறைந்துவிட்டதாக கூறியுள்ளனர். வெறும் சில வினாடிகளிலேயே, இவ்வளவு அதிக வேகத்தினை அடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

2004ம் ஆண்டில் இவ்வளவு வேகத்தில் பறக்கக் கூடிய விமானமோ அல்லது விண்கலமோ இப்புவியில் இல்லை. எப்படியும் 11 வேற்றுக் கிரகப் பறக்கும் தட்டுகள் அந்தக் கூட்டத்தில் இருந்திருக்கலாம் என்றுக் கூறியுள்ளனர். இந்த பறக்கும் தட்டுக்களை அவர் வீடியோவும் எடுத்துள்ளனர். அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அந்த வீடியோ உண்மையானது எனவும், அதில் எவ்வித பொய்யும் இல்லை எனவும் தெரிவித்து உள்ளனர். இருப்பினும், அதில் இருக்கும் விஷயங்கள் என்ன என, யாருக்கும் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

எப்பொழுதும் ஒரு பறக்கும் தட்டுக்களே மனிதர்களால், படம் பிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இவ்வளவு பறக்கும் தட்டுக்கள் மொத்தமாக கண்டறியப்பட்டுள்ள தகவல், ஆய்வாளர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS