பூமியினை நோக்கி வரும் பிளாக்ஹோல்! உலகம் அழியும் ஆபத்தா?

05 October 2020 தொழில்நுட்பம்
blackholespace.jpg

நாம் வாழ்கின்ற புவியினை நோக்கி, பெரிய அளவிலான கருந்துளை (பிளாக்ஹோல்) ஒன்று நகர்ந்து வருவதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

உலகளவில் நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வரிசையில், தற்பொழுது அனைத்து விண்வெளி ஆய்வாளர்களையும் கவர்ந்துள்ள விஷயமாக, இந்த பிளாக்ஹோல் உள்ளன. இந்த பிளாக்ஹோலின் தோராயமான படத்தினை கடந்த ஆண்டு, நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டனர். இந்த வரிசையில் தற்பொழுது புதிய ஆய்வு ஒன்றில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அதில், நாம் வாழ்கின்ற பால்வெளி அண்டத்திற்கு மிக அருகில் இருக்கும் அண்டமாக ஆன்ட்ரோமேடா உள்ளது. அதன் மையத்தில் ஒரு கருந்துளை உள்ளது. ஒவ்வொரு அண்டத்தின் மையத்திலும் இந்தக் கருந்துளை உள்ளது எனவும், அதுவே, அந்த அண்டத்தினை சரியாக செயல்பட வைக்கின்றது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆன்ட்ரோமேடாவில் உள்ள கருந்துளையானது, தற்பொழுது புவியினை நோக்கி நகரத் துவங்கி உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

வினாடிக்கு 110 கிலோமீட்டர்கள் வேகத்தில் இது நகர்ந்து வருகின்றது. இது புவியினை நெருங்க எப்படியும், நானூறு கோடி வருடங்கள் ஆகும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தற்பொழுது நாம் வாழும் புவிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும், ஒரு நாள் இந்தப் புவியானது, அந்தக் கருந்துளைக்குள் செல்லும் என, விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்தக் கருந்துளையானது, நம்முடைய சூரியனை விட, பல மடங்கு எடை அடர்த்தியாகவும், வலிமை ஆனதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

HOT NEWS