பிளாக்ஹோலாக மாறிய நட்சத்திரம்! விஞ்ஞானிகள் குழப்பம்!

16 August 2020 அமானுஷ்யம்
blackhole.jpg

எப்பொழுதும் சூப்பர்நோவா என அழைக்கப்படும் நிலையில் இருந்து தான், பிளாக்ஹோல் உருவாகும். ஆனால், தற்பொழுது நட்சத்திரம் ஒன்றே பிளாக்ஹோலாக மாறியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் விண்வெளி ஆய்வானது, நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே உள்ளது. உலகம் முழுக்க இருக்கின்ற விஞ்ஞானிகள் பல்வேறு அண்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன்படி, கடந்த 2009ம் ஆண்டு முதல், அமெரிக்காவின் ஓஹியோ ஸ்டேட் பல்கலைக் கழகமானது, புவியில் இருந்து 22 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள N6946-BH1 என்ற அண்டத்தினைக் கண்காணித்து வருகின்றது.

இந்த அண்டத்திற்கு பட்டாசு அண்டம் எனவும் பெயர் வைத்துள்ளது. இந்த அண்டத்தில் இருந்த நட்சத்திரமானது, கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடைந்ததை கண்காணித்து வந்தனர். 2015ம் ஆண்டு, இந்த நட்சத்திரத்தினைக் காண இயலாத காரணத்தால், அது அழிந்திருக்கும் என்றுக் கருதினர். தொடர்ந்து, அதனை ஆய்வு செய்ததில், அந்த நட்சத்திரம் அழிந்ததும், அந்த அண்டமே, பிளாக்ஹோலாக மாறியிருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

பொதுவாக, நட்சத்திரங்கள் அழிந்ததும் சூப்பர்நோவா என்ற வெடிப்பு நிலைக்குச் செல்லும். பின்னர் தான், அது பிளாக்ஹோலாக மாற்றமடையும். ஆனால், இம்முறை சூப்பர்நோவா என்ற வெடிப்பு உருவாகவே இல்லை. மாறாக, நேரடியாக முழு அண்டமும் பிளாக்ஹோலாக மாறியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது முற்றிலும், வித்தியாசமான அமைப்பு என்றேக் கூறுகின்றனர்.

இந்த நட்சத்திரமானது, நம்முடைய சூரியனை விட 25 மடங்கு எடை மிகுந்ததாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. இது குறித்து பேசும் விஞ்ஞானிகளுள் ஒருவரான ஸ்காட் ஆடம்ஸ், இது போன்ற விசித்திரமான நிகழ்வானது, ஒரு சில பெரிய நட்சத்திரங்களைக் கொண்ட அண்டங்களுக்கே நடைபெறும் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது சர்வதேச விஞ்ஞானிகள் மத்தியில், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS