அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பு! வீடுகளை கட்டியுள்ளதால் பரபரப்பு!

23 January 2021 அரசியல்
chinavillage.jpg

அருணாச்சலப் பிரசேத்தில் சப்தமே இல்லாமல், 4.5 கிலோமீட்டருக்கு வீடுகளை கட்டியுள்ளது சீனா. இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் நீடித்து வருகின்றது. இரு நாடுகளும் லடாக் எல்லைப் பகுதிகளில் தங்களுடையப் படைகளைக் குவித்து வருகின்றனர். தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் தங்களுடையது எனக் கூறி வருகின்ற சீனா, அப்பகுதியில் யாருக்கும் தெரியாமல் பெரிய வேலையினை செய்துள்ளது.

அமெரிக்காவின் இமேஜிங் நிறுவனமான ப்ளானட் லேப்ஸ் நிறுவனமானது, புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது. அந்தப் புகைப்படங்களில் சுமார் 4.5 கிலோமீட்டர் இந்திய எல்லைக்குள் சீனா, புதிய கிராமத்தினையே உருவாக்கி உள்ளது. அந்தக் கிராமத்தில் வீடுகளையும் கட்டி உள்ளது. இவை கடந்த 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இல்லை. சமீபத்தில் தான் கட்டப்பட்டு உள்ளது உறுதியாகி உள்ளது.

தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேசம் எங்களுடையது எனவும், நாங்கள் அத்துமீறவில்லை எனவும் நாங்கள் சரியாகத் தான் செய்துள்ளோம் எனவும் சீனா கூறி வருகின்றது. இந்த நிலையில், சீனாவின் அட்டூழியங்களை சகித்துக் கொண்டு இருக்க முடியாது எனவும், சீனா தங்களுடையப் படைகளை பின் வாங்கிக் கொள்ளாதப் பட்சத்தில், நாங்களும் பின் வாங்கப்போவதில்லை என, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS