வடகொரியாவில் உள்ள விசித்திரமான விஷயங்கள் பற்றி தெரியுமா?

26 October 2020 அரசியல்
northkorea-mystery.jpg

மர்மதேசம் கதை பற்றி நமக்கு தெரியும். ஆனால், ஒரு தேசமே மர்மமாக செயல்பட்டு வருகின்றது என்றால், அது வட கொரியா தான். உலகளவில் பல நாடுகளும் இந்த நாடு குறித்து, பலவிதமானத் தகவல்களை தினமும் சேகரித்து வந்தாலும், அந்த நாட்டின் மர்மங்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த நாட்டில் உள்ள சில விசித்திரமான பழக்கங்களைப் பற்றிப் பார்ப்போம்.

கொரிய நாடு

உலகினைப் பொறுத்தமட்டில், வடகொரியா மற்றும் தென் கொரியா என இரு நாடுகள் உள்ளன. ஆனால், வட கொரியாவினைப் பொறுத்தமட்டில் கொரியா என ஒரு நாடு மட்டுமே உள்ளது எனப்படுகின்றது. அதன் தலைநகர் பியாங்கியாங் தான். கொரிய தீபகற்பம், வட கொரியா, தென் கொரியா எனப் பிரிக்கப்பட்டாலும் அதனை தற்பொழுது வரை வட கொரியா ஏற்கவே இல்லை.

அமெரிக்கர்களுக்கு பெரிய மூக்கு

வட கொரியாவில் இருப்பவர்கள் தற்பொழுது வரை, அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு பெரிய மூக்கு இருப்பதாக நம்புகின்றனர். அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் ஆகவே ஆகாது. எனவே, வட கொரியாவில் உள்ள பள்ளிகளில், அமெரிக்கர்களின் புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன. அந்தப் புகைப்படங்கள் அனைத்தும், உடற்பயிற்சி வகுப்பின் பொழுது பயன்படுத்தப்படுகின்றன. அந்தப் புகைப்படங்களில், அமெரிக்கர்களுக்கு பெரிய கண்கள், பெரிய மூக்கு, பெரிய காது இருக்கும்.

வட கொரியா நாடு கம்யூனிஸம் கிடையாது

வட கொரிய நாட்டில், கம்யூனிஸ சித்தம் இருப்பதாக பெரிதும் நம்பப்படுகின்றது. ஆனால், உண்மையில் வட கொரியாவில் கம்யூனிஸ சித்தம் முடிவுக்கு வந்தது 1950ல். அந்த ஆண்டுடன் கம்யூனிஸ கோட்பாடு முடிவுக்கு வந்துவிட்டது. மார்க்சிஸம் மற்றும் லெனினிஸம் போன்ற கோட்பாடுகளும் கைவிடப்பட்டு விட்டன. தற்பொழுது அங்கு கிட்டத்தட்ட மன்னர் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

வரியே இல்லாத நாடு

வட கொரிய நாட்டில் வரி என்பதே கிடையாது. அந்த நாட்டில் 1947ம் ஆண்டிலேயே வரியானது ஒழிக்கப்பட்டு விட்டது. அந்த நாட்டில் வரி இல்லாத காரணத்தால், பொதுமக்கள் சுதந்திரமாக வாழ இயலும் என நம்பப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும், இனி வரும் காலங்களில் வரி விதிக்கப்படலாம் என்றுக் கூறப்படுகின்றது.

அமெரிக்க படங்களுக்கு வரவேற்பு

அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் பிரச்சனை இருந்து வருகின்றது என்றாலும், வட கொரியாவில் அமெரிக்க படங்களுக்கு கடுமையான கிராக்கி உண்டு. அமெரிக்கப் படங்களை, அந்நாட்டு மக்கள் வெறி பிடித்தவர்கள் போல் பார்க்கின்றனர். மேலும், தென் கொரியப் படங்களையும் விரும்பி பார்க்கின்றனர்.

கடல் உணவு உற்பத்தியில் NO.1

உலகளவில் கடல் உணவு உற்பத்தியில், வட கொரியா தான் நம்பர் ஒன் நாடாகும். அந்நாட்டின் ஏற்றுமதியில் 60% ஆனது, கடல் உணவு ஆகும். அதன் மிக முக்கிய இறக்குமதி நாடாக சீனா உள்ளது. மேலும் 20 நாடுகளுக்கும் மேலாக, தன்னுடைய கடல் உணவினை ஏற்றுமதி செய்து வருகின்றது வட கொரியா.

வட கொரியா அதிபர் ஆட்சி

உலகிலேயே வட கொரியாவில் மட்டுமே புதுவிதமான ஆட்சி நடைபெற்று வருகின்றது. அந்நாட்டில் உள்ள தொழிலாளர் கட்சியின் தலைவராக, கிம் ஜோங் உன் உள்ளார். அவர் தான் தற்பொழுது வட கொரியாவின் தலைவர் ஆவார். அவருடையக் கட்டுப்பாட்டில் தான், அந்நாடு உள்ளது. இதுவரை செய்திகளில் வருவது போல், அவர் வட கொரிய அதிபர் எல்லாம் கிடையாது. அந்த நாட்டினைக் கட்டுப்படுத்த அவருக்கு அந்தப் பதவியும் தேவை கிடையாது.

உலகின் பிரம்மாண்ட திருவிழா

வட கொரியாவில் தான், உலகின் மிகப் பிரம்மாண்டத் திருவிழாவானது நடைபெற்று வருகின்றது. மே 1ம் தேதி அன்று, ஒவ்வொரு வருடமும் இந்த விழாவானது நடைபெறுவது வட கொரியாவில் வழக்கம். இந்த விழாவானது, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது. வட கொரியாவில் மொத்தம் 2 கோடியே 50 லட்சம் பேர் உள்ளனர். இதில், ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் 0.4% ஆகும்.

எல்லையில் மர்ம நகரம்

தென் கொரியாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையில் ஒரே ஒரு கோடு மட்டுமே எல்லையாக உள்ளது. இதனால், இரண்டு நாடுகளுக்கு இடையிலும், டம்மியாக ஒரு நகரத்தினை வட கொரியா உருவாக்கியது. 1950ம் ஆண்டு முதல் இந்த நகரம் உள்ளது. இதில் ஒரே மாதிரி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விளக்குகள் எரியும். இதனை அப்பொழுதில் இருந்து, தென் கொரியா கண்காணித்து வருகின்றது. தற்பொழுது அதன் உண்மை விளங்கி உள்ளது.

அந்த நகரம் செயற்கையாக உருவாக்கப்பட்டது. ஒரு பெண் வழக்கம் போல், ஒரே நேரத்தில் அந்தக் கட்டிடத்தில் உள்ள ஒரு அறையின் கண்ணாடியினைத் துடைப்பார். தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில், அந்த நகரத்தில் உள்ளக் கட்டிடங்களில் சுவர் கிடையாது. அறைகள் கிடையாது. எதுவும் கிடையாது.

கட்டாய இராணுவ சேவை

வட கொரிய நாட்டில், கட்டாய இராணுவ சேவை பின்பற்றப்படுகின்றது. அந்த நாட்டில் உள்ள அனைவருமே, அந்நாட்டு இராணுவத்தில் 10 வருடங்கள் பணிபுரிய வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள், கட்டாயம் இராணுவத்தில் சேவை செய்ய வேண்டும். இது 2003ம் ஆண்டுக்குப் பின், 13 வருடங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நாட்டின் இராணுவத்தில் தற்பொழுது பத்து லட்சம் இராணுவ வீரர்கள் உள்ளனர். மேலும், 60 லட்சம் துருப்பு வீரர்கள் உள்ளனர்.

HOT NEWS