EPSக்கு YES! OPSக்கு NO! மோடி வைத்த செக்! மாற்றம் அடைந்த ஓபிஎஸ்!

16 February 2021 அரசியல்
modiinchennai.jpg

கடந்த வாரம் சென்னைக்கு பிரதமர் மோடி வந்து சென்ற பின், அதிமுகவில் எடப்பாடியின் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் 2 மாதங்களே தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு உள்ள நிலையில், பிப்ரவரி 14ம் தேதி பிரதமர் மோடி, அரசுமுறை பயணமாக சென்னை வந்திருந்தார். அப்பொழுது எடப்பாடி பழனிசாமியினை தனியாக சந்தித்துப் பேசிய அவர், ஓபிஎஸ்ஸை தனியாக சந்தித்துப் பேசவில்லை. இது ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தானே அதிமுகவின் தலைவராக ஒவ்வொரு நாளும் அடையாளப்படுத்திக் கொண்டு வருகின்றார் எடப்பாடி பழனிசாமி. இதனைக் கருத்தில் கொண்டு ஓபிஎஸ் தற்பொழுது மேடையில் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றார் எனக் கூறியிருந்தார். இந்தப் பேச்சானது, எடப்பாடியின் கைவசம் கட்சி சென்றுள்ளதைக் காட்டுகின்றது. மேலும், சசிகலாவினைக் கட்சியில் சேர்க்க முடியாது என்ற முடிவில், இருவரும் ஒற்றுமையாக உள்ளனர்.

மோடியும் எடப்பாடியின் செல்வாக்கினை, உளவுத்துறை மூலம் நன்கு அறிந்து வைத்துள்ளார். இதனால் தான், எடப்பாடியிடம் தனியாக தேர்தல் குறித்து பேசி வருகின்றார். விரைவில், அமித் ஷாவும் தமிழகம் வர உள்ளதால், தேர்தல் வியூகம், தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் குறித்து அவருடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தையினை நடத்துவர் எனக் கூறப்படுகின்றது.

HOT NEWS