தனுஷின் ஆயிரத்தில் ஒருவன் 2! கார்த்தியின் புதுப்பேட்டை 2!

03 January 2021 சினிமா
ao2pudhupettai2.jpg

தனுஷ் நடிப்பில் 2024ம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தினையும், கார்த்தியின் நடிப்பில் புதுப்பேட்டை 2 படத்தினையும் இயக்க உள்ளதாக, இயக்குநர் செல்வராகவன் தெரிவித்து உள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியாகி ப்ளாப் ஆனத் திரைப்படம் புதுப்பேட்டை. இந்தப் படம் வெளியானக் காலத்தில் தோல்வியடைந்திருந்தாலும், தற்பொழுது இதனை பல கோடி தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணமாக அமைந்ததே, படத்தின் கதை தான். நேர்த்தியான திரைக்கதை. அருமையான நடிப்பு என, படத்தின் அனைத்துமே சிறப்பாக இருக்கும். இதனை இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருந்தார்.

அதே போல் 2010ம் ஆண்டு பெரிய பரபரப்புடன் வெளியாகி தோல்வியடைந்த திரைப்படம் என்றால் அது ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி, பார்திபன், நடிகை ரீமா சென், ஆன்ட்ரியா உள்ளிட்டப் பலர் நடித்திருந்தார். படத்தின் பாடல்கள், திரைக்கதைகள் அனைத்துமே தமிழ் சினிமாவிற்கு புதியதாக இருந்து வந்தன. இந்தப் படத்தினையும் செல்வராகவன் தான். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தினையும் தானே, இயக்க உள்ளதாக, செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

இதில் புதிய வித்தியாசத்தினை, செல்வராகவன் கொண்டு வந்துள்ளார். அதன்படி, கார்த்தி நடிப்பில் ஏற்கனவே வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அடுத்த பாகத்தில், தனுஷ் நடிக்க உள்ளார். அதே போல், தனுஷ் நடிப்பில் உருவாகி இருந்த புதுப்பேட்டை படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார். இந்தப் படங்கள் அனைத்துமே, வருகின்ற 2024ம் ஆண்டு வெளியாகும் என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தப் படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்க உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS