லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!

22 January 2021 சினிமா
kanchana3.jpg

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படமானது, திரில்லர் படமாக உருவாக்கப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேய் படங்கள் என்றால் நம் நினைவிற்கு சட்டென்று வருவது, காஞ்சனா திரைப்படம் தான். அந்தப் படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்றுக் கூறினால், அது மிகையாகாது. அந்த அளவிற்கு அந்தப் படமானது, பட்டித் தொட்டி எங்கும் பட்டையினைக் கிளப்பியது. அந்தப் படத்தினைத் தொடர்ந்து, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 ஆகியப் பாகங்களும் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் சக்கைப் போடு போட்டன. பலவிதமானப் படங்களில், லாரன்ஸ் நடித்திருந்தாலும், காஞ்சனா படம் மட்டுமே அவருக்குக் கைக் கொடுத்துள்ளன.

இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் 2ம் பாகத்தில் லாரன்ஸ் நடிப்பதாக, பேசப்பட்டன. இருப்பினும், அதற்கு அதிகளவில் செலவாகும் என்பதால், இந்தப் படமானது தற்பொழுது எடுக்கப்படவில்லை என, லாரன்ஸ் தரப்பில் பேசப்படுகின்றன. இந்த சூழலில், தற்பொழுது புதியப் படத்தில் நடிகர் லாரன்ஸ் ஒப்பந்தமாகி உள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்டப் படங்களைத் தயாரித்தவர் எஸ்.கதிரேசன். அவர் தற்பொழுது லாரன்ஸை வைத்து படம் எடுக்க உள்ளார். அவர் இப்படத்தில், இயக்குநராகவும் அறிமுகமாகின்றார். இவரே, இப்படத்தினையும் தயாரிக்கவும் உள்ளார். இந்தப் படத்தில், ப்ரியா பவானிபாஸ்கர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்தப் படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், நாசர் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். இதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கின்றார்.

இந்தப் படத்தின் சூட்டிங்கானது, சென்னையில் துவங்கி உள்ளது. இந்தப் படத்திற்கு ருத்ரன் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் படமானது, திரில்லர் படமாகவும், திகில் படமாகவும் உருவாக்கப்பட உள்ளதாக, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS