வானில் பறந்த மர்ம பொருள்! அமெரிக்காவில் பார்த்தவர்கள் அதிர்ச்சி!

05 January 2021 அரசியல்
ufo.jpg

அமெரிக்காவின் ஹாவாய் பகுதியில் திடீரென்று மர்மப் பொருள் பறந்ததைப் பார்த்தாக, அப்பகுதியில் வசித்து வருகின்ற மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் பல பகுதிகளில் ஏலியன்கள் வந்து செல்வதாக, தொடர்ந்து பல முறை செய்திகளும், வீடியோக்களும் வந்து இருக்கின்றன. ஆனால், தற்பொழுது அதற்கெல்லாம் மேலாக புதிய வீடியோ ஒன்றினை பொதுமக்கள் எடுத்துள்ளனர். அது மட்டுமின்றி, ஏலியன்களின் பறக்கும் தட்டினை தாங்கள் பார்த்ததாக பலரும் கூறியிருப்பது சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் ஹாவாய் பகுதியில், பொதுமக்கள் வழக்கம் போல சாவகாசமாக கடற்கரைப் பகுதியில் இருந்தனர். அப்பொழுது, யாரும் எதிர்பாராத வகையில், வானில் நீல நிற வெளிச்சத்துடன் பறக்கும் பொருள் ஒன்றினைக் கண்டுள்ளனர். அது குறித்து, அமெரிக்காவின் அவசர எண்ணான 911 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அவ்வாறு வானில் பறந்த மர்மப் பொருளையும், தங்களிடம் இருந்து செல்போனில் படம் பிடிக்கவும் தொடங்கினர். அவ்வாறு வானில் பறந்த அந்த மர்மப் பொருளானது வேகமாக கடலுக்குள் சென்று மறைந்து விட்டது என்றுக் கூறுகின்றனர். இது தற்பொழுது அமெரிக்காவில் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

HOT NEWS