WWE LUKE HARPER வீரர் மரணம்! நுரையீரல் பிரச்சனையால் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

28 December 2020 விளையாட்டு
lukerharper.jpg

உலகளவில் பிரசித்திப் பெற்ற நிகழ்ச்சியான WWE போட்டியாளராக இருந்து வந்த, LUKE HARPER நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.

அமெரிக்காவின் பிரசித்திப் பெற்ற விளையாட்டுப் போட்டிகளுள் தலைசிறந்ததாக பார்க்கப்படுவது மல்யுத்தம் தான். அதனை அடிப்படையாக கொண்டு நடைபெறும் நிகழ்ச்சி WWE. இந்த நிகழ்ச்சியினை உலகின் பல நாடுகளைச் சேர்ந்த, கோடிக் கணக்கான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களும் விளையாடி வருகின்றனர். அதில் அமெரிக்காவினைச் சேர்ந்த ஜான் ஹப்பர் நேற்று, நுரையீரலில் ஏற்பட்டத் தொற்றுக் காரணமாக மரணமடைந்தார்.

இது குறித்து பதிவிட்டுள்ள அவருடைய மனைவி, தன்னுடைய கணவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக, அவர் மரணமடைந்துள்ளார் எனத் தெரிவித்து உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு WWE நிகழ்ச்சியில் இருந்து விலகிய அவர், All Elite Wrestling என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் WWE நிகழ்ச்சியில், LUKE HARPER என்றப் பெயரில் கலந்து கொண்டார்.

இவருக்கென, தனி ரசிகர் படையே உண்டு. இவர் தன்னுடன் பணிபுரிகின்ற சகப் போட்டியாளர்களுடன் சகஜமாகவும், நேர்மையாகவும் பழகினார் எனப் பலப் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS