அதிவேக இணையம் கண்டுபிடுப்பு! அப்பா இவ்வளவு வேகமா?

25 May 2020 தொழில்நுட்பம்
internetearth.jpg

தற்பொழுது உலகம் முழுக்க 4ஜி இணையத்தினை பயனர்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், உலகில் இதுவரை இல்லாத வேகத்தில், அதிவேக இணையக் கண்டுபிடிப்பானது உருவாக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவினைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தற்பொழுது இணைய ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லினை தொட்டுள்ளனர். அவர்கள் ஒரு வினாடியில் 44.2 டெராபிட் வேகத்தினைத் தொட்டு சாதனை படைத்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மோனோஷ் ஸ்வின்பேர்ன் மற்றும் ஆர்எம்ஐடி பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் இந்தளவு வேகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இவ்வளவு வேகத்தினை எந்த ஒரு ஆய்விலும் உருவாக்கவில்லை. பொதுவாக, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், பைபரைப் பயன்படுத்தி இணையத்தினை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில், இதற்கு மாற்றாக மைக்ரோ காம்ப் என்ற புதிய தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தியதன் விளைவாக, இவ்வளவு அதிவேக இணையத்தினை உருவாக்கியுள்ளதாக, விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த இணைய வேகத்தினைப் பயன்படுத்தி, ஒரு வினாடியில் சுமார் 1000 ஹெச்டி திரைப்படங்களை, எவ்விதப் பிரச்சனையும் இன்று தரவிறக்கம் செய்ய இயலும் எனவும் கூறுகின்றனர். இதனால், இணைய உலகில் புதிய புரட்சியே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS