கொரோனா தடுப்பூசி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கூறிய WHO!

07 October 2020 அரசியல்
whochief.jpg

கொரோனா தடுப்பூசி எப்பொழுது வெளியாகும் என, உலக சுகாதார அமைப்பு நம்பிக்கைத் தெரிவித்து உள்ளது.

சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், உலகம் முழுக்க பல நாடுகளில், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ரஷ்யா ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியினை கண்டுபிடித்து, அதனை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது.

இந்நிலையில், தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்ற உலக சுகாதார அமைப்பு, இன்றும் செய்தியாளர்களைச் சந்தித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதில், உலகமே இந்தக் கொரோனாவை ஒன்றாக இணைந்து, எதிர்க்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரஸானது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அதற்கேற்றாற் போல முன்னேற்பாடுகளை செய்வது அவசியம்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி வேண்டியது அவசியமாகும். அந்த ஊசியினை அனைவரும் பெரும் விதத்தில், உலக நாடுகளின் தலைவர்கள் சமமாக பிரித்து வழங்க வேண்டும். வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா வைரஸிற்கு, மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என, உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS