தோனியா, ரோகித்தா! யார் திறமையான ஐபிஎல் கேப்டன்! தகவல் வெளியானது!

20 April 2020 விளையாட்டு
csk2.jpg

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற, ஐபிஎல் டி20 தொடரில் யார் சிறந்த வீரர்கள் என்றப் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடுவர் குழு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி அன்று, ஐபிஎல் டி20 தொடரானது ஆரம்பமாக இருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக, அப்பொழுது ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் இருந்தது. வருகின்ற மே-3ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த ஊரடங்கானது மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளதால், வருகின்ற மே மாதமும் இந்தப் போட்டி நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன. எனவே, காலவரையின்றி இந்த ஆண்டிற்கானத் தொடரினை பிசிசிஐ ஒத்தி வைத்துள்ளது. இருப்பினும், வருகின்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், இந்தத் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனை சோனி நிறுவனம் ஒளிபரப்பி வந்தது. தற்பொழுது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது. இதனைத் தொடர்ந்து, இந்த போட்டிகளில் விளையாட சிறந்த வீரர்களின் பட்டியல் ஒன்றினை அந்த டிவி சேனலின் நடுவர் குழு தயாரித்து வெளியிட்டுள்ளது.

அதன் படி சிறந்தக் கேப்டன்களாக, ரோகித் ஷர்மாவும், எம்எஸ் தோனியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். டிவில்லியர்ஸ், மலிங்கா, சேன் வாட்சன், விராட் கோலி, ஆண்டர் ரசில், டேவிட் வார்னர், கிரிஸ் கெயில், சுனில் நரைன், ட்வைன் ப்ராவோ, புவனேஷ்வர்குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

HOT NEWS