விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் இலங்கையை சேர்ந்தவர்! கைது செய்ய தீவிரம்!

22 October 2020 சினிமா
vijaysethupathi.jpg

விஜய்சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்தவர், இலங்கையினைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

முன்னாள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின், வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்ட 800 படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அந்தப் படத்தில் அவர் நடிக்கக் கூடாது என, தமிழ் பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை கடுமையாகத் தெரிவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், தற்பொழுது அந்தப் படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகிவிட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 800 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும் எனவும், ஒரு வேளை அவர் விலகவில்லை என்றால், அவருடைய மகள் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்படுவார் எனவும் சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதனை சென்னை சைபர் க்ரைம் போலீசார் விசாரணை செய்தனர்.

அவர்கள் அந்த சமூக வலைதள பக்கம் பயன்படுத்தப்பட்ட, ஐபி எண்ணைக் கண்டுபிடித்தனர். அதனடிப்படையில் அந்த சமூக வலைதளப் பக்கமானது, இலங்கையினைச் சார்ந்தது என உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த கணக்கினை, இளைஞர் ஒருவர் பயன்படுத்தி வருகின்றார் என்பதும் உறுதியாகி உள்ளது. அவரைக் கைது செய்வதற்காக, இண்டர்போல் உதவியினை, தற்பொழுது தமிழகக் காவல்துறை நாடியுள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS