பாஜகவில் இணைந்தார் விஜயசாந்தி! தெலுங்கானாவில் 2023ல் பாஜக ஆட்சி அமைக்கும் என முழக்கம்!

08 December 2020 அரசியல்
vijayashanti.jpg

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி, நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பாஜக மற்றும் டிஆர்எஸ் உள்ளிட்டக் கட்சிகளில் இருந்து வந்த விஜயசாந்தி, கடைசியாக 2014ம் ஆண்டு காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் தற்பொழுது, நேற்று டெல்லிக்குச் சென்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவினைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் தன்னைப் பாஜகவில் இணைத்துக் கொண்டார். அவர் இது குறித்து கூறுகையில், நான் காங்கிரஸில் கடுமையாக உழைத்தேன். இருப்பினும், எனக்கு எவ்வித முக்கியத்துவமும் தரவில்லை.

அதனால் அக்கட்சியில் இருந்து விலகியதாகவும், வருகின்ற 2023ம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கானாவில் பாஜகவின் ஆட்சி மலரும் எனவும் தெரிவித்தார்.

HOT NEWS