43 மருத்துவர்கள் மரணமா? அமைச்சர் மீண்டும் மறுப்பு!

10 August 2020 அரசியல்
vijayabaskar.jpg

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 43 மருத்துவர்கள் மரணமடைந்ததாக கூறப்படுவதை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றானது, வேகமாகப் பரவி வருகின்றது. முதலில் சென்னையில் மட்டும் பரவி வந்த இந்த வைரஸானது, தற்பொழுது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக, மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இன்று செய்தியாளர்களை, கொரோனா வைரஸ் குறித்து விளக்கம் அளிக்கச் சந்தித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

அவர் பேசுகையில், முன்னாள் நின்று வேலை செய்யக் கூடிய முன்நிலைக் களப்பணியாளர்களை வைத்து, எதிர்கட்சிகள் அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை விற்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழகத்தில் 43 மருத்துவர்கள் மரணமடையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

HOT NEWS