மீண்டும் விஜய்-ஏஆர்முருகதாஸ்! தயாராகும் துப்பாக்கி-2!

24 March 2020 சினிமா
thuppaki2.jpg

கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி அன்று, நடிகர் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஹரீஸ் ஜெயராஜ் இசையில் வெளியான திரைப்படம் துப்பாக்கி 2.

இந்தப் படமானது, பெரும் தோல்வியில் இருந்து கொண்டிருந்த விஜயினை, பெரும் வெற்றியினைப் பெற வைத்து, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாற்றியது. இந்தப் படத்தினை, ஹிந்தியிலும் ரீமேக் செய்தனர். அவ்வளவு பெரிய பிரம்மாண்ட வெற்றியினைப் பெற்ற இந்தப் படத்தின் அடுத்தப் பாகம் எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு விஜயின் ரசிகர்களிடம் நிலவி வந்தது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்நிலையில், சர்கார் படமானது பெரிய அளவில் ஏமாற்றத்தினை விஜயின் ரசிகர்களுக்குத் தந்தது. தர்பார் திரைப்படமோ, ஏஆர் முருகதாஸின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது. இந்நிலையில், மீண்டும் விஜய் மற்றும் ஏஆர் முருகதாஸ் கூட்டணியானது உருவாகி உள்ளது.

மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, தன்னுடைய அடுத்தப் படத்திற்கான கதையினை நடிகர் விஜய் கேட்டு வருகின்றாராம். புஸ்கர் இ காயத்ரி அந்த லிஸ்டில் இருந்து வந்த நிலையில், தற்பொழுது அவருக்குப் பதிலாக ஏஆர் முருகதாஸ் உள்ளாராம். இவர்கள் இருவரும் இணைந்து, புதிய படம் உருவாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இந்தப் படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படமானது, முற்றிலும் விஜயின் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட உள்ளது எனவும், விஜயின் ரசிகர்களுக்குப் பிடித்த துப்பாக்கிப் படத்தின் அடுத்தப் பாகத்தினை உருவாக்க உள்ளதாகவும், சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கத் துவங்கி உள்ளன.

HOT NEWS