அப்பா எஸ்ஏசி மக்கள் இயக்கம்! புதிய கட்சியினை ஆரம்பித்த விஜயின் தந்தை!

04 January 2021 சினிமா
sachandrsekhar.jpg

விஜயின் தந்தை எஸ்ஏசந்திரசேகர், மீண்டும் புதியதாகக் கட்சி ஒன்றினைத் துவங்க உள்ளார்.

நடிகர் விஜயின் தந்தை விஜய் மக்கள் இயக்கம் என்ற விஜயின் ரசிகர் மன்றத்தினை, தானே ஆரம்பித்ததாகவும் அதனால் அதனை தற்பொழுது நானே அதனைக் கட்சியாக மாற்றுவதாகவும் கூறி இருந்தார். மேலும் அதற்குப் பலரையும் பொருப்பாளாரக நியமித்து வந்தார். அதில் விஜயின் தாயினையும் நியமித்தார். இதிலிருந்து விஜயின் தாய் உடனடியாக விலகி விட்டார்.

இந்த அமைப்பிற்கும், தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும், அதனுடன் தன்னுடைய அமைப்பினர் தேவையற்றத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் கூறினார். இதனால், அந்த அமைப்பினை அவருடைய தந்தை எஸ்ஏசி கைவிட்டார். இந்த சூழலில் தற்பொழுது புதியதாக, அப்பா எஸ்ஏசி மக்கள் இயக்கம் என்றப் பெயரில், புதிய கட்சி ஒன்றினை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்தக் கட்சி குறித்த அறிவிப்பானது, வருகின்ற பொங்கல் அன்று வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது. இந்த கட்சியின் பணிகள் அனைத்தும் தற்பொழுது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அக்கட்சி உறுப்பினர்களையும், பொறுப்பாளர்களையும் நியமித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS