பாடகர் வீரமணி ராஜூவுக்கு ஹரிவராசனம் விருது! கேரள அரசு அறிவிப்பு!

25 December 2020 அரசியல்
kveeramaniaward.jpg

பக்தி பாடகர் வீரமணி ராஜூவுக்கு, கேரள அரசானது தன்னுடைய உயரிய விருதான ஹரிவராசன விருதினை அறிவித்து உள்ளது.

ஐயப்பன் பாடல்கள், முருகன் பாடல்கள் என தமிழில் பல நல்ல பக்திப் பாடல்களைப் பாடியவர் வீரமணி ராஜூ. தீவிர ஐயப்ப பக்தரான இவர், தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற பக்தி பாடகர்களுள் ஒருவர். இவருடையப் பாடல் இல்லாமல், ஐயப்பன் கோயில்களே இல்லை எனவும் அளவிற்கு, இவருடையப் பாடல்கள் பிரசித்திப் பெற்றவை. இவர் தன்னுடையப் பாடல்கள் மூலம், மத நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்டவைகளை வளர்த்து வந்தார்.

இதனை முன்னிட்டு, 2021ம் ஆண்டிற்கான, ஹரிவராசனம் விருதினை, பாடகர் வீரமணி ராஜூவிற்கு வழங்க உள்ளதாக, அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. வருகின்ற மகர ஜோதி விழாவின் பொழுது, இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS