ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

20 January 2021 சினிமா
valimai.jpg

தற்பொழுது இறுதிக்கட்டக் காட்சிகளை படமாக்குவதற்காக, தல அஜித் மொராக்கோவிற்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தின் இறுதிக் கட்ட சூட்டிங்கானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளுக்காக தற்பொழுது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டிற்கு படக்குழுவானது சென்றுள்ளது. போலீஸ் கதையாக தயாராகி வருகின்ற இந்தப் படத்தில், அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார்.

தீரன் அதிகாரம் ஒன்றினை இயக்கிய ஹெச் வினோத் அதே பாணியில், தரமான கதையில் அஜித்தினை நடிக்க வைத்து வருகின்றார். இதில் அஜித்குமார் உடல் எடையினைக் குறைத்து, மிகவும் பிட்டாக நடித்து வருகின்றார். இப்படத்தில் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதாக, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்பொழுது 4000 கிலோமீட்டர்கள் தூரம் பைக்கில் சென்னை முதல் சிக்கிம் வரை தனியாக சென்ற அஜித்குமார், தற்பொழுது மொராக்கோவிற்கு செல்ல உள்ளார்.

அங்கு அவர் ஏன் செல்கின்றார் என சுவாரஸ்யமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மொராக்கோவில் பைக் ரேஸ் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. அங்கு படத்தின் இறுதிக் காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட உள்ளதால், அஜித்குமார் நடிக்கும் பைக் ரேஸ் காட்சிகளும் எடுக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வலிமை படத்தில் மாஸான பைக் ரேஸ் காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.

HOT NEWS