மக்கள் நல கூட்டணி கிடையாது! வைகோ அறிவிப்பு! எகிறும் எதிர்பார்ப்பு!

02 January 2021 அரசியல்
vaiko.jpg

திமுக கூட்டணியில் இருந்தாலும், தங்களுடையச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பினை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அவர் பேசுகையில், தாம் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருப்பதாகவும், அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் கூறியுள்ளார். இதில், திமுக தன்னுடைய சின்னத்தினை விட, தன்னுடைய கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். மேலும், மக்கள் நலக் கூட்டணியானது உருவாகும் வாய்ப்புகள் இல்லை எனவும், யாரும் ரஜினிகாந்த் குறித்து அவதூறாக மீம்ஸ்களோ அல்லது அவரைக் காயப்படுத்தும் விஷயங்களையோ செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

HOT NEWS