வடசென்னை2 அப்டேட் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன்!

11 May 2020 சினிமா
vadachennaireview1.jpg

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், டேனியல் பாலாஜி, பவன் எனப் பலர் நடித்து வெளியான திரைப்படம் வடசென்னை. இத்திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் அடுத்தப் பாகத்தினை உருவாக்கும் முயற்சியில், இயக்குநர் வெற்றிமாறன் இறங்கியுள்ளார்.

இது குறித்து, தினமும், நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனிடம் தொடர்ந்து, அவர்களுடைய ரசிகர்கள் எப்பொழுது வடசென்னை-2 வெளியாகும் எனக் கேட்டுக் கொண்டே இருந்தனர். இது பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய வெற்றிமாறன், இந்த வடசென்னை-2 படத்தினை வெப்சீரிஸாக வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இந்தப் படத்தினை உருவாக்கக் காலம் ஆகும் எனவும் தெரிவித்தார்.

தற்பொழுது தமிழ் படங்கள் பலவற்றினை, நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட வலைதளங்களில் வெளியிடுகின்றனர். அதுமட்டுமின்றி, ஆன்லைன் தொடர்கள் பலவும் இந்த வலைதளங்களில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS