குஜராத் மாநிலத்தில் உலோகத் தூண்! விரிவடையும் மர்மம்!

02 January 2021 அமானுஷ்யம்
monolithgujrat.jpg

உலகின் பல நாடுகளில் திடீரென்றுத் தோன்றிய உலோகத் தூணானது, தற்பொழுது குஜராத் மாநிலத்திலும் தோன்றியுள்ளது.

அமெரிக்காவின் உட்டா, கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ருமேனியா, சுவட்சர்லாந்து, ஜெர்மனி, போலாந்து, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில், உலோகத் தூண் ஒன்று தோன்றி மறைந்தது. இதனை யார் வைக்கின்றார்கள் என யாருக்கும் தெரியவில்லை. எங்கு தோன்றுகின்றதோ, அங்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் அது மறைந்தும் விடுகின்றது. இதனால், பொதுமக்கள் பீதியில் உள்ளன.

இது ஏலியன்களின் செயல் எனவும், மர்ம மனிதர்கள் தான் இவ்வாறு செய்கின்றனர் எனவும், மனிதர்களைத் திசைத் திருப்புவதற்காக இவ்வாறான செயல்கள் செய்யப்படுவதாகவும் பலரும் கூற ஆரம்பித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற நெட்பிளிக்ஸ் நிறுவனமானது, தன்னுடைய பிளாக் மிரர் சீரிஸிற்காக இவ்வாறான விளம்பரங்களில் ஈடுபடுகின்றது என்றக் குற்றச்ச்சாட்டும் எழுந்தது. இருப்பினும், இதுவரை யாருமே இதற்குப் பொறுப்பேற்கவே இல்லை.

நாங்கள் தான் அமெரிக்காவின் உட்டா நகரில் தூணை வைத்தோம் என, தி மோஸ்ட் பேமஸ் ஆர்ட் குழுவானது தெரிவித்தது. ஆனால், பிற பகுதிகளில் வைகப்பட்டுள்ளத் தூண்களுக்கும் எங்களுக்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும், அதனை நாங்கள் வைக்கவில்லை எனவும் கூறியது. இதனால், உலகவளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த தூண்களால், பெரிய அளவிலான மர்மானது தற்பொழுது ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில், யாரும் எதிர்பாத வகையில், இந்த தூணானது தற்பொழுது இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரின் தால்தேஜ் பகுதியில் அமைந்துள்ளது சிம்பொனி பூங்கா. இங்கு தான், தற்பொழுது இந்தத் தூணானது கண்டறியப்பட்டு உள்ளது. இந்தப் பூங்காவில் வேலை செய்து வருகின்ற தோட்டக்காரர் கூறுகையில், நேற்று மாலையில் தான் வீட்டிற்குச் சென்றேன். அப்பொழுது இவ்வாறு தூணானது இல்லை. இது புவியில் இருந்து முளைக்கவில்லை. அதே சமயம், இதனைக் கொண்டு வந்து வைத்ததற்கான தடயமும் இல்லை. இது எவ்வாறு இங்கு வந்துள்ளது என, யாருக்கும் தெரியவில்லை என்றுக் கூறியுள்ளார்.

சுமார் ஆறடி உயரமுள்ள இந்தத் தூணுடன் நின்று கொண்டு, அப்பகுதி மக்கள் தற்பொழுது செல்பி எடுத்து வருகின்றனர். சுமார் 30க்கும் அதிகமான உலகின் பல்வேறு இடங்களில், இந்தத் தூணானது தோன்றி மறைந்து உள்ளதால், இது தற்பொழுது பொது மக்களிடையே பீதியினை கிளப்பி உள்ளது.

HOT NEWS