வானில் பறந்தது ஏலியன் விண்கலம் தான்! அமெரிக்கா ஒப்புதல்!

28 April 2020 தொழில்நுட்பம்
ufosigtings.jpg

வானில் பறந்தது ஏலியன் விண்கலம் தான் என, அமெரிக்க கடற்படை விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அமெரிக்க கடற்படையானது, கடந்த 2004 மற்றும் 2015ம் ஆண்டுகளில், மூன்று வீடியோக்களை எடுத்தது. அதன் கேமிராக்களில் மிகவும் அதிவேகத்தில் பறந்த, பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இவை உண்மையான வீடியோக்களா என, முதலில் ஆய்வு செய்ய வேண்டும் என, அமெரிக்க கடற்படைக் கூறியது.

இந்நிலையில், செய்தியாளர்களின் பார்வைக்காக இந்த வீடியோக்களை வெளியிட்டனர். 2004ம் ஆண்டு எடுத்த வீடியோவினை 2007ம் ஆண்டும், 2015ம் ஆண்டு எடுத்த இரண்டு வீடியோக்களை 2017ம் ஆண்டும் வெளியிட்டனர். அந்த வீடியோக்கள் தற்பொழுது வரை, வைராலாகவே உள்ளன. அந்த அளவிற்கு, அதில் உள்ள பறக்கும் தட்டுக்கள் மிக வேகமாக செல்லும்.

இதனை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ததில், அந்த வீடியோக்களில் இருப்பவை என்னவென்று தெரியவில்லை எனவும் ஆனால், அந்த வீடியோ உண்மையான ஒன்று எனவும் கூறியுள்ளனர். இதில் இருப்பவைகள் பறக்கும் தட்டுக்கள் போல இருக்கின்றன எனவும், இம்மாதிரியான விஷயங்களை மனிதர்களால் உருவாக்கியிருக்க முடியாது எனவும் கூறியிருக்கின்றனர். இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS