தூத்துக்குடி குண்டு வீசி ரவுடி பலி! போலீசார் மரணம்! 50 லட்சம் நிவாரணம்!

18 August 2020 அரசியல்
tutukudibombblast.jpg

தூத்துக்குடியில் போலீசார் மீது குண்டு வீசிய ரவுடி துரைமுத்து, உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்குத் தொடர்பாக, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றன. இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக, தகவல்கள் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த ரவுடி, கையில் இருந்து நாட்டு வெடிகுண்டினை வீசியதில், போலீசார் தாக்கப்பட்டனர். இதில், சுப்பிரமணியம் என்றக் காவலர் வெடி குண்டு வெடித்ததில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த ரவுடியும் அந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில், பிரபல ரவுடியாக இருந்து வந்த துரைமுத்து என்பவர் தான் குண்டு வீச்சில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் தற்பொழுது மரணம் அடைந்துள்ளதாக போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிவாரணத்தினை, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

HOT NEWS