டிஆர்பி முறைகேடு! ரிபப்ளிக் டிவி முதன்மை அதிகாரியிடம் 9 மணி நேரம் விசாரணை!

12 October 2020 அரசியல்
tv.jpg

இந்தியா அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ள டிஆர்பி முறைகேடு தொடர்பாக, ரிபப்ளிக் டிவி தலைமை நிர்வாகியினை போலீசார் அழைத்துச் சென்று 9 மணி நேரம் விசாரணை செய்தனர்.

மும்பை மாநகர காவல் ஆணையர் சென்ற வாரம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், ஆங்கில செய்தி சேனல் நிறுவனமான ரிபப்ளிக் டிவி உட்பட பல டிவி சேனல்கள், பார்வையாளர்களுக்குப் பணம் வழங்கி, அவர்களுடைய டிவி சேனலின் டிஆர்பி ரேட்டிங்கினை மாற்றியிருப்பதாகவும், இது குறித்து ஹன்சா நிறுவனத்தினைச் சேர்ந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு ரிபப்ளிக் டிவி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

அந்த டிவியின் பெயரை கெடுக்கும் விதமாக ஆணையர் கூறியதாகவும், தாங்கள் அவ்வாறு எதவும் செய்யவில்லை எனவும், இந்தியா டுடே சேனலின் பெயரே முறைகேட்டிற்கான அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாகவும், தெரிவித்தது. தொடர்ந்து, ரிபப்ளிக் டிவியின் நிறுவனர் அர்னாப் கோஸ்வாமியின் மீதும் அடுக்கடுக்காக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், தற்பொழுது ரிபப்ளிக் டிவியின் தலைமை செயல் அதிகாரியான விகாஷ் கன்சன்தானியினை, போலீசார் விசாரித்து உள்ளனர்.

அவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார், பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்துள்ளனர். அந்த டிவி சேனல் எப்படி பணம் வழங்கியது, யாருக்கெல்லாம் பணம் வழங்கி டிஆர்பி ரேட்டிங்கினை ஏற்றியது உள்ளிட்டப் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS