எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று முடிவு வெளியானது!

14 July 2020 அரசியல்
epscm.jpg

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற கொரோனா சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றானது, வேகமாகப் பரவிக் கொண்டே இருக்கின்றது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல அரசியல்வாதிகளும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழலில் தற்பொழுது வரை, தமிழகத்தில் மட்டும் 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் நடைபெற்று உள்ளன.

அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றதா என, பரிசோதனை நடைபெற்றது. அதற்கான முடிவு தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. அதே போல், அவருடைய அலுவலகத்தில் பணிபுரிந்த யாருக்கும் தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

HOT NEWS