தோனி மகளுக்கு கற்பழிப்பு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

10 October 2020 விளையாட்டு
dhonidaughter.jpg

தோனியின் மகள் சிவாவிற்கு கற்பழிப்பு கொலை மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் கைது செய்து உள்ளனர்.

தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் போட்டிகளானது நடைபெற்று வருகின்றது. இதில், மகேந்திர சிங் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, படுமோசமாக விளையாடி வருகின்றது. இந்த அணிக் குறித்தும், அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்தும் பலவிதமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளன. கடந்த போட்டியில், சென்னை அணி படுதோல்வியினைத் தழுவியது.

இதனால், தோனியின் மனைவி சாக்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பலரும் தங்களுடைய எதிர்ப்பினைப் பதிவு செய்து வந்தனர். அதில், உங்கள் மகள் சிவாவினை கற்பழிப்பேன் எனவும், கொலை செய்வேன் எனவும் இளைஞர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் மிரட்டல் விடுத்தார். இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. அது எப்படி, இந்தியாவிற்கு பெருமைத் தேடித் தந்த நபருக்கு இப்படியொரு மிரட்டல் வரலாம் எனக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் முந்த்ரா மாவட்டத்தினைச் சேர்ந்த 16 வயது இளைஞர் ஒருவரை, போலீசார் கைது செய்து உள்ளனர். அந்த இளைஞரும் அவர் செய்ததை ஒப்புக் கொண்டு உள்ளார். அவரை ராஞ்சியினைச் சேர்ந்த போலீசார் தற்பொழுது அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளனர். அந்த இளைஞர், தானே சாக்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிரட்டல் விடுத்ததாக, போலீசார் விசாரணையில் ஒப்புக் கொண்டு உள்ளார்.

HOT NEWS