இந்தியாவினைக் குறி வைக்கும் டெஸ்லா! விரைவில் புதிய தொழிற்சாலை!

09 July 2020 தொழில்நுட்பம்
carfactory.jpg

விரைவில் டெஸ்லா தன்னுடையத் தொழிற்சாலையினை, ஆசியக் கண்டத்தில் தொடங்க உள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் தற்பொழுது உலகளவில் பிரசித்து பெற்று வருகின்றன. இந்தக் கார்களை தயாரிக்கும் தொழிற்சாலையானது, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது. அங்கு கிட்டத்தட்ட 10,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிறுவனமானது, தன்னுடைய ஜிகாபேக்டரியினை சீனாவிற்கு வெளியில், ஆசியாவில் உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே, சீனாவில் ஜிகாபேக்டரியின் 3வது பிரிவானது செயல்பட்டு வருகின்றது. இதனிடையே, சீனாவிற்கும் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வருவதால், சீனாவிற்குப் பதிலாக ஆசியாவின் பிற நாடுகளான இந்தோனேஷியா, ஜப்பான், கொரியா, மியான்மர், வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அமைக்கலாம் என்றுக் கருதப்பட்டு வருகின்றது.

இந்த நாடுகளில், மிகக் குறைந்தத் தொகைக்கு, அதிக ஊழியர்கள் கிடைப்பார்கள் என்றக் காரணத்தாலும், அங்கு அதிக வசதிகளை அரசாங்கம் அளிக்கும் என்பதாலும், அந்நிறுவனம் இந்த நாடுகளைக் குறி வைத்துத் தேடி வருகின்றது. இதற்கிடையில், இந்தியாவிற்கு இந்த தொழிற்சாலையானது வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொழிற்சாலைக்குத் தேவையான வசதிகள், இந்தியாவில் தாராளமாகக் கிடைக்கும். அதே போல், மிகக் குறைந்த ஊதியத்தில், அதிக ஊழியர்கள் இந்தியாவில் கிடைப்பர். இதனைக் காரணமாகக் கொண்டு, அந்த நிறுவனம் தன்னுடைய பெரிய தொழிற்சாலையினை இந்தியாவிற்குள் அமைக்க வாய்ப்பிருப்பதாக, அந்த நிறுவனத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே, கடந்த மாதம் டெஸ்லாவிற்கு கடிதத்தின் மூலம், தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். இதனால், இந்தியாவிற்குள் இந்த நிறுவனம் தொழிற்சாலையினை உருவாக்கினால், அது குஜராத், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் அல்லது தமிழ்நாட்டில் உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS