கமலா ஹாரீஸ் வெற்றி! பூர்வீக திருவாரூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

09 November 2020 அரசியல்
kamalaharrsivillage.jpg

அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில், கமலா ஹாரீஸ் வெற்றிப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் பொதுமக்கள், பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

உலகளவில் மிகவும் கவனமாகப் பார்க்கப்படும் விஷயமாக இருந்து வருவது அமெரிக்க அதிபர் தேர்தல். நடந்து முடிந்த அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கானத் தேர்தலில், டெமோக்ராட்டிக் கட்சியினைச் சேர்ந்த ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரீஸ் ஆகியோர் அபார வெற்றியினை பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம், விரைவில் அவர்கள் அதிபர் மற்றும் துணை அதிபராகப் பொறுப்பேற்க உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய ஜோ பிடன், அனைவரும் வாழத் தகுந்த அமெரிக்காவினை உருவாக்கும் எனவும், எதிர்கட்சிகள் ஆளும் கட்சி என எவ்விதப் பேதமும் இல்லாமல், அனைவருமே அமெரிக்கர்கள் தான் என்றுக் கூறியுள்ளார். கமலா ஹாரீஸ் பேசுகையில், அமெரிக்க மக்கள் வளர்ச்சிக்கா பாடுபடுவேன் எனவும், தன்னுடைய இந்த நிலைக்குக் காரணமான, தன்னுடையத் தாய்க்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன் எனவும், அவர் கூறியுள்ளார்.

கமலா ஹாரீஸ் தமிழகத்தில் பிறந்தவர் என்பதால், அவருடைய பூர்வீக ஊரான துளசேந்திரபுரம் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும், கமலா ஹாரீஸின் சித்திக் குடும்பத்தினர் பதவி ஏற்பு விழாவிற்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS