தமிழகம் இரண்டாமிடம்! கொரோனாவை தடுக்க முடியாமல் அரசாங்கம் திணறல்!

04 April 2020 அரசியல்
edappadicm1.jpg

இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி, தமிழகம் தான் தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால் உலகமே தற்பொழுது திண்டாடி வருகின்றது. அமெரிக்காவில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தற்பொழுது வரை, 2902 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, தேசிய சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

அதில், 184 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்துவிட்டதாகவும், 68 பேர் மரணமடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2602 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பதையடுத்து, அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, சுமார் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் தான், இந்த நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்திய அளவில், 423 நோயாளிகளுடன் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 19 பேர் இந்த நோயால் அங்கு மரணமடைந்துள்ளனர். 42 பேர், இந்த நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 411 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 6 பேர் குணமடைந்து உள்ளனர். இரண்டு பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தினைத் தொடர்ந்து, டெல்லியில் 386 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஆறு பேர் மரணமடைந்து உள்ளனர். 8 பேர் நோய் குணமாகி வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கேரளாவில் 295 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 2 பேர் மரணமடைந்து உள்ளனர். 41 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

HOT NEWS