விநியோகஸ்தர்களுக்கும் உதவும் லாரன்ஸ்! பாராட்டுத் தெரிவித்த டிஆர்!

17 April 2020 சினிமா
raghavalawrence2.jpg

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்குச் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு உதவிகளை அறிவித்தார்.

இதனால், அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும், தான் மேலும் பல உதவிகளைச் செய்ய விரும்புவதாகவும், அது குறித்து ஆடிட்டரிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். ஏழை எளிய மக்களுக்கு உணவு, அவர் தங்கியுள்ள பகுதியில் உள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் என பலவற்றையும் வழங்கி வருகின்றார் லாரன்ஸ்.

இந்நிலையில், தற்பொழுது இவர் உதவியிருப்பது குறித்து, டிராஜேந்தர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் சங்க உறுப்பினர்களில் சிலர் திரைப்பட வினியோக தொழில் செய்து நஷ்டம் அடைந்து நலிந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு தொகை கிடைக்கும் வகையில், ஒரு திட்டம் தீட்டி வைத்து இருந்தோம். இதற்காக நான், ‘இன்னிசை காதலன்’ என்ற புதிய படத்தை தொடங்க இருந்தேன்.

ஆனால், கொரோனா பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஊரடங்கு என்று கைகள் கட்டப்பட்டு விட்டன. என் தர்மசங்கடமான நிலைமையை ராகவா லாரன்சிடம் எடுத்து சொன்னேன். அவர் மனமுவந்து எங்கள் சங்க அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சம் வழங்கி இருக்கிறார். அவருக்கு எங்கள் சங்கம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS