ஜோதிகாவினை கடுமையாக விமர்சித்துள்ள எஸ்வி சேகர்! அப்படி என்ன பேசினார் ஜோ?

23 April 2020 சினிமா
svsekarcovid.jpg

நடிகை ஜோதிகாவினை கடுமையாக விமர்சித்து நடிகர் எஸ்வி சேகர் தன்னுடையக் கருத்தினைப் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகை ஜோதிகா பேசியிருந்தார். அப்பொழுது, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனையைப் போல, மிக நன்றாகப் பராமரித்து வருகின்றனர். அதே போல், ராட்சசி படத்திற்காக மருத்துவமனை ஒன்றில் சூட்டிங் எடுக்க வேண்டி இருந்தது.

அதற்காக, நான் அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றேன். அந்த மருத்துவமனையைப் பற்றி சொல்ல முடியாது. அந்த அளவிற்கு, மிகவும் மோசமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து நான் அங்கு செல்லவில்லை. கோயில்களுக்குத் தாராளமாக காணிக்கை அளிக்கின்றனர். சுத்தமாகப் பராமரிக்கின்றனர். அதே போல், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும் என்றுக் கூறினார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

இது பேசி மாதங்கள் ஓடிவிட்டன. இதனை தற்பொழுது தனியார் டிவி ஒன்று ஒளிபரப்பியது. அவ்வளவு தான், சமூக வலைதளங்களில், தங்களுடையக் கருத்துக்களைப் பலரும் பதிவிட ஆரம்பித்து விட்டனர். அது எப்படி, கோயில்களைப் பற்றி இவ்வாறு ஜோதிகா பேசலாம் என்று ஆளாளுக்கு திட்ட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், இது குறித்து நடிகரும், இந்து ஆர்வலருமான எஸ்.வி.சேகர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், சுத்தமாக அறிவில்லாத பேச்சு. ஜோதிகா 100 % மெச்சூரிட்டி இல்லாத பேச்சு .கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

HOT NEWS