ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

18 August 2020 அரசியல்
highcourt.jpg

ஸ்டெர்லைட் ஆலையினை திறக்கத் தடை தொடரும் என, தமிழக உயர்நீதிமறம் தீர்ப்பளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கானது இன்று, நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க வேண்டும் என, அந்த ஆலையின் தரப்பில் கூறப்பட்டது. இந்த ஆலையானது, தொடர்ந்து நிலத்தடி நீரினை மாசாக்குவதாகவும், காற்று மாசு உள்ளிட்டவைகளை ஏற்படுத்துவதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்த ஆலையினை எதிர்த்து கடந்த 2018ம் ஆண்டு, தூத்துக்குடி மாவடத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் 13 பேரினை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த ஆலையானது மூடி சீல் வைக்கப்பட்டது. இதனிடையே, மூடப்பட்ட ஆலையினைத் திறக்க வேண்டும் என, உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம், வழக்குத் தொடர்ந்தது.

அதனை எதிர்த்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டப் பலரும், மனு தாக்கல் செய்தனர். பல்வேறு தரப்பு விசாரணைகள் மற்றும் ஆய்வுகளை அடுத்து, இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிமன்றம், ஆலையினைத் திறப்பதற்கானத் தடை தொடரும் என்றுக் கூறியது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் பலரும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

HOT NEWS