கடைசி தொழிலாளி வீடு போகும் வரை நான் உதவுவேன்! சோனுசூட் உருக்கம்!

10 June 2020 அரசியல்
sonusood.jpg

போலீசார் தன்னைத் தடுக்கின்ற போதிலும், மக்களுக்காக செய்யும் பணியினை நான் விடமாட்டேன் என, பாலிவுட் நடிகர் சோனு சோட் உறுதியாக கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக, வெளிமாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயரும் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு, நடந்தே செல்கின்றனர். அவர்களுக்கு பலரும் தங்களுடைய உதவியினை செய்து வருகின்றனர்.

இவர்களில் அனைவராலும் பாரட்டப்படும் நபராக சோனு சூட் உள்ளார். பாலிவுட் நடிகரான சோனு சூட், மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை பகுதியில் வசித்து வருகின்றார். அங்கு, சிக்கித் தவிக்கின்ற வெளிமாநில மக்களை, அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்ற முயற்சியில் அவர் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர். 150க்கும் மேற்ப்பட விவசாயிகள் மற்றும் புலம்பெயரும் தொழிலாளர்கள் விமானத்தில் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து, புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக ஏழு சிறப்பு உதவியாளர்களை நியமித்து உள்ளார். அவர்கள், புலம் பெயரும் தொழிலாளர்கள் பட்டியலைத் தயார் செய்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர். இவருக்குப் பின்னால், பாஜக அரசு இருப்பதாகவும், அதனால் தான் அவர் இவ்வாறு செய்கின்றார் எனவும் மஹாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா கட்சிக்குச் சொந்தமான சாம்னா இதழில் செய்தி வெளியானது.

இதனைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வரும், சிவசேனாக் கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்ரேவினை சந்தித்து சோனு சூட் பேசினார். அப்பொழுது உத்தவ் தாக்ரே, சோனுவின் இந்த செயல்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாக சோனு கூறினார். இந்நிலையில், மும்பையில் உள்ள இரயில் நிலையத்தில், புலம்பெயரும் தொழிலாளர்களைக் காண சோனு சூட் சென்றுள்ளார்.

ஆனால், அவரை போலீசார் உள்ளே செல்லவிடாமல் தடுத்துள்ளனர். இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சோனு, நான் கடைசி புலம் பெயரும் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த வீடு சென்று சேரும் வரை உதவி செய்வேன். இதில் அரசியல் எதும் இல்லை. சாதாரணம மனிதாபினாம் தான் என்றுக் கூறியுள்ளார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS