புதையல் பொய்! விஏஓ உட்பட 5 பேர் கைது!

28 April 2020 அரசியல்
treasures.jpg

தேங்காயைப் பயன்படுத்தி, புதையல் எடுக்க உள்ளதாக கூறி ஏமாற்றித் திரிந்த நபர்களை, போலீசார் கைது செய்துள்ளனர்.

தோப்பைப்பட்டி என்ற கிராமத்தினைச் சேர்ந்தவர் செல்வக்குமார். அவர் மிகவும் சக்திமிக்கவர் என பொதுமக்கள் நம்புகின்றனர். அவர் கையை அசைத்தே, தேங்காயை சுழற்றி விடுவார் எனப் பலர் கூறினர். எங்கு புதையல் இருந்தாலும், அதனை இருந்த இடத்தில் இருந்தே அடையாளம் காட்டிக் கொடுத்துவிடுவார் என்றுக் கூறும் அளவிற்கு மனிதர் செல்வாக்குடன் இருந்துள்ளார்.

அவர் எங்கு சொல்கின்றாரோ, அங்கு மண்ணுக்கு அடியில் ஒரு சில பொருட்கள் இருக்கும். இது வாட்ஸ் ஆப் உள்ளிட்டவைகளில், வைரலானது. அவர் கை அசைவின் மூலம், தேங்காயை சுழல வைத்ததும் வீடியோவாக வைரலானது. இதனைத் தொடர்ந்து, அவரைப் பிடித்து விசாரிக்க காவல்துறைக் கண்காணிப்பாளர் வருண்குமார். அதனடிப்படையில், போலீசார் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தனர்.

இதில், அவர்களே திடுக்கிடும் அளவிற்கு பல பேர் இதற்காக செயல்பட்டுக் கொண்டு இருந்தது அம்பலமாகி உள்ளது. தோப்பைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி, உதவியாளர் மகாதேவன், முருகராஜ், தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்த அருள்சாமி, சிவகங்கை மாவட்டம் ஏனாதியினைச் சேர்ந்த முத்து என்றப் பெண்மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர் குழுவாக செயல்பட்டு, பணக்காரர்களை ஏமாற்றி பல லட்சக்கணக்கான ரூபாய்களை சுறிட்டியது அம்பலமாகி உள்ளது. அவர் எவ்வாறு தேங்காயினை சுற்ற வைக்கின்றார் எனவும் போலீசார் விளக்கமளித்துள்ளனர். கண்ணுக்கேத் தெரியாத வகையில், தேங்காயுடன் நூல் கட்டப்பட்டு உள்ளது. அதனை வைத்துத் தான், தேங்காயினை சுற்றியிருக்கின்றார் எனப் போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

HOT NEWS