தோனி ஏற்கனவே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்! அக்தர் அதிரடி!

13 April 2020 விளையாட்டு
shoaibaktar1.jpg

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த போதே, மகேந்திர சிங் தோனி, ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோகிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ள அவர், தோனி ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீரர். அவருடைய நாட்டிற்காக, அவர் செய்த சாதனைகள் பல. அவர் போன்ற வீரரை மிகவும் மரியாதையுடனும், கௌரவத்துடனும் வழியனுப்பி வைக்க வேண்டியது அந்நாட்டின் கடமை. தற்போதைய சூழ்நிலையில், தோனியால் தன்னுடைய முழுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்த இயலவில்லை.

அவர் கடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் பொழுதே, ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவருடைய இடத்தில் நான் இருந்திருந்தால், அதைத் தான் செய்திருப்பேன். உலகக் கோப்பைக்குப் பிறகு கூட, ஒரு பிரியாவிடைத் தொடரில் விளையாடி ஓய்வு பெற்றிருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவர் ஏன், ஓய்வு பெறும் விஷயத்தில் இழுத்தடித்து வருகின்றார் எனத் தெரியவில்லை என்று தன்னுடைய வீடியோப் பதிவில் தெரிவித்துள்ளார்.

HOT NEWS