ஷேன் வாட்சன் அனைத்து வித கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு! ரசிகர்கள் வாழ்த்து!

01 November 2020 விளையாட்டு
shanewatson.jpg

அனைத்து வித கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, ஷேன் வாட்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன், பெரிய அளவில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. இதனால், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சூழ்நிலையில், 40 வயதினைக் கடந்த ஷேன் வாட்சன் அனைத்து விதக் கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் ட்வீட் செய்தும் உள்ளார்.

ராஜஸ்தான் ராயஸ் அணிக்காக ஐபிஎல் விளையாட ஆரம்பித்த அவர், இதுவரை 3874 ரன்களையும், 92 விக்கெட்டுகளையும், 40 கேட்ச்களும் பிடித்துள்ளார். ராயல்ஸ் சேலஜ்சர்ஸ் பெங்களூரு அணிக்காவும் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காவும் அவர் விளையாடியுள்ளார். 2015ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வாட்சன், தற்பொழுது ஐபிஎல் உட்பட அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வினை அறிவித்து உள்ளார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS