காலமானார் முதல் ஜேம்ஸ்பாண்ட் நாயகன்! உலகம் முழுவதும் ரசிகர்கள் இரங்கல்!

01 November 2020 சினிமா
seanconnery.jpg

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் முதல் கதாநாயகனான சீன் கானோரி, தற்பொழுது உயிரிழந்துள்ளார். அவருக்கு அவருடைய ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்காட்லாந்து நாட்டினைச் சேர்ந்த சீன் கானோரி, ஜேம்ஸ்பாண்ட் படங்களின் மூலம், உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றவர் ஆவார். அவர் நடித்த Dr. No in 1962, From Russia With Love, Goldfinger, Thunderball, You Only Live Twice and Diamonds Are Forever படங்கள் உலகளவில் சக்கை போடு போட்டன. இதனால் ஜேம்ஸ்பாண்ட் பட வரிசைப் படங்கள், பெருமளவில் வளர்ச்சி அடைந்தன. அந்தப் படங்களில் ஜேம்ஸ்பாண்டாக வந்த அவருக்கென, கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர். 90 வயதான அவர், தற்பொழுது புதிய படங்களில் நடிப்பதில்லை.

அவர் தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதே, அவருடைய உயிர் பிரிந்துள்ளதாக அவருடைய மகன் ஜேசன் கானோரி கூறியுள்ளார். ஹைலேண்டர் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த அவருக்கு, சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது இங்கிலாந்து அரசு. அவருக்கு திரையுலகப் பிரபலங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS