செப்டம்பருக்கு கொரோனா தொற்று முடிவிற்கு வரும்! சுகாதாரத்துறை கருத்து!

08 June 2020 அரசியல்
lab.jpg

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது, வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் முடிவிற்கு வரும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் நிபுணர் குழு கூறியுள்ளது.

எபிடமாலஜி இன்டர்நேஷனல் என்ற மருத்துவ ஆய்விதழில் இந்திய சுகாதாரத்துறை நிபுணர்களான அணில்குமார் மற்றும் ரூபாலி ராய் ஆகியோர் புதிய ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்தியாவில் பரவி வருகின்ற இந்தக் கொரோனா வைரஸ் பரவும் எண்ணிக்கையும், மரணத்தின் அளவும் மற்றும் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் சமமாகும் பொழுது, இந்த தொற்று முடிவிற்கு வரும் என்றுக் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு, கணிதத்தின் அடிப்படையில் நடைபெற்று உள்ளது. பெய்லி கணிதமுறையில் இந்த ஆய்வினை இரண்டு நிபுணர்களும் செய்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர், குணமடையும் வரையோ அல்லது இறக்கும் வரையோ கொரோனா வைரஸை பரப்புகின்றார் எனவும், தனிமைப்படுத்துதல், தீவிரப் பரிசோதனை ஆகியவைகளை முறையாகச் செய்தால் கண்டிப்பாக, இந்த நோய் பரவலை வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் முடிவிற்கு கொண்டு வர இயலும் என்றுக் கூறியுள்ளனர்.

HOT NEWS