சூப்பர் நோவா மாறிய நட்சத்திரம்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

25 August 2020 தொழில்நுட்பம்
supernova-7.jpg

தற்பொழுது புதியதாக சூப்பர் நோவா ஒன்றினை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுக்கப் பல லட்சம் விஞ்ஞானிகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே, விண்வெளி ஆய்வில் புதிது புதிதாகப் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். இவ்வாறுக் கண்டுபிடிக்கப்படும் விஷயங்கள் அனைத்துமே, நம்மையும் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கும் விதத்தில் தான் உள்ளன.

அப்படி ஒரு நிகழ்வினை, இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த வார்விக் பல்கலைக்கழகமானது, புதிய ஆய்வுக் கட்டுரையினை வெளியிட்டுள்ளது. அதில், புதியதாக சூப்பர்நோவா ஒன்று உருவாகி இருப்பதாகவும், அது ஒரு நட்சத்திரத்தால் ஏற்பட்டு உள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்த வெடிப்பிற்கு காரணமாக நட்சத்திரமானது, தற்பொழுது வெள்ளை நிறத்தில் சிறிய நட்சத்திரமாக சுருங்கி வருகின்றது.

இந்த வெள்ளை நிற சிறிய நட்சத்திரத்திற்கு SDSS J1240+6710 என்ற பெயரினை, விஞ்ஞானிகள் வைத்துள்ளனர். இந்த நட்சத்திரம் புவியில் இருந்து சுமார் 1,430 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நட்சத்திரம் புவிக்கு எதிர்திசையில், 9,00,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நட்சத்திரத்தில் ஹீலியம், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை உள்ளன.

இதனால் உருவான சூப்பர்நோவாவில், பல வாயுக்கள் கலந்து நிற்கின்றன. பார்ப்பதற்கு மிகப் பிரம்மாண்டமாக இருப்பதாகவும், இதனால் நம்முடைய பால்வெளிக்கு எவ்விதப் பாதிப்பும் வராது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS