சிறார்களுக்கான மரண தண்டனை முற்றிலும் ரத்து! சவுதி அரசு இறக்கம்!

28 April 2020 அரசியல்
deathpunishment.jpg

சவுதியில், சிறார்களுக்கு வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையானது, ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனை, மனித உரிமைகள் ஆணையம் வரவேற்று உள்ளது.

உலகளவில் மிகப் பெரிய, கொடூரமான தண்டனைகளை வழங்கும் நாடு என்றால் அது சவுதி அரேபியா தான். அங்கு கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்கள், திருடுபவர்களுக்கு கசையடி உள்ளிட்டக் கொடூரமானத் தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கமான விஷயமாகும். மேலும், திருடியவர்களின் கை விரல்களை, அனைவர் முன்னிலையிலும் வெட்டுவது, பலாத்காரம் செய்தவர்களை நடுவீதியில் வைத்து, கழுத்தை வெட்டுவது உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த தண்டனைகளின் வீடியோக்களானது, யூடிப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ளது. மேலும், அங்கு மரண தண்டனை, தூக்கு தண்டனை உள்ளிட்டவை சாதாரணமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்பொழுது அங்கு பதவியில் இருக்கும் சல்மான் இந்தத் தண்டனைகளுக்கு முடிவு கட்டியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கசையடி தண்டனையானது ஒழிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்பொழுது அந்நாட்டில் சிறார்களுக்கு வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையானது ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால், 18 வயதிற்கு கீழ், குற்றம் செய்யும் சிறார்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட மாட்டாது. இதனை, மனித உரிமைகள் ஆணையம் தற்பொழுது முழு மனதாக வரவேற்றுள்ளது.

HOT NEWS