இந்தியாவின் மிகப் பிரம்மாண்ட திரைப்படம்! ஆதிபுருஸ்! பிரபாஸ் நடிக்கின்றார்!

03 September 2020 சினிமா
adipurush.jpg

இந்தியாவிலேயே தற்பொழுது மிகப் பிரம்மாண்டமான திரைப்படமானது உருவாக்கப்பட உள்ளது.

சஹோ திரைப்படத்தினைத் தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் பிரபாஸ் நடிக்கும் திரைப்படத்தின் பெயரானது ஆதிபுருஸ் (ஆதிபுருஷர்) என வைக்கப்பட்டு உள்ளது. இதில், பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படம், பல இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. தற்பொழுது இப்படத்தில் நடிக்க உள்ள, கதாப்பாத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தப் படத்தினை ஓம் ராவத் இயக்குகின்றார். இதனை பூஷன் குமார் தயாரிக்கின்றார். இதன் போஸ்டர்கள் தற்பொழுது வெளியாக ஆரம்பித்து உள்ளன. இந்தப் படமானது, முற்றிலும் 3டி முறையில் உருவாக்கப்படுகின்றது. இந்தப் படத்தினை ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கி, பின்னர் பல மொழிகளுக்கு டப்பிங் செய்ய உள்ளனர். இந்தப் படத்தின் பட்ஜெட்டானது, இந்தியாவிலேயே மிகவும் அதிகமான ஒன்றாக இருக்கும் எனவும், இந்தப் படத்தினை 2021ம் ஆண்டு ஆரம்பிக்க உள்ளதாகவும் படக் குழுவினர் கூறியுள்ளனர்.

இந்தப் படத்தில் நடிக்க, சயிப் அலி கான் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இராவணன் கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். மேலும், பிற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யும் பணியானது நடைபெற்று வருகின்றது. இந்தப் படம், மிகப் பிரம்மாண்டமாக 2022ம் ஆண்டு வெளியாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS