இந்திய அணியில் நடராஜனை சேர்க்கலாம்! சச்சின் கருத்து! அதிகரிக்கும் ஆதரவு!

12 December 2020 விளையாட்டு
nattunatarajan.jpg

இந்திய டெஸ்ட் அணியில் நடராஜனை சேர்க்கலாம் என, கிரிக்கெட்டின் கடவுள் எனக் கொண்டாடப்படும் சச்சின் கூறியுள்ளார்.

இந்திய அணியானது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது. அங்கு ஒரு நாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடர்களில் ஒரு நாள் தொடரினை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரினை இந்தியாவும் கைப்பற்றி உள்ளன. இந்நிலையில், டெஸ்ட் போட்டியினை யார் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு, இரு அணிகளும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், காயம் காரணமாக இஷாந்த் சர்மா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவருக்குப் பதிலாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதில், தற்பொழுது நடராஜனை சேர்க்கலாம் என்றுப் பலரும் பரிந்துரைத்து வருகின்றனர். இது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடையக் கருத்தினைப் பதிவிட்டு உள்ளார். அதில், நடராஜன் நன்றாக விளையாடுகின்றார் எனவும், அவரை இந்திய அணியில் சேர்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரே இவ்வாறு கூறியுள்ளதால், நடராஜனை இந்திய அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தற்பொழுது, தமிழர்கள் வெறித்தனமாக ஆதரித்து வருகின்றனர்.

HOT NEWS