இந்தியாவிற்கு கோரிக்கை வைத்த ரஷ்யா! கொரோனா மருந்தினை சோதிக்க அழைப்பு!

03 October 2020 அரசியல்
moscow-russia.jpg

இந்திய அரசு, தாங்கள் தயாரித்து உள்ள கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தினை சோதித்துப் பார்க்க வேண்டும் என, ரஷ்ய அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் அதிவேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், சுமார் 12க்கும் மேற்பட்ட உலகின் முன்னணி நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதில், இங்கிலாந்து, சீனா, உள்ளிட்ட நாடுகளின் மருந்துகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. ரஷ்யா தான் தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி என்ற மருந்தினை, மக்கள் மீது செலுத்தி வருகின்றது.

இந்த மருந்தானது, மிகவும் பாதுகாப்பானது எனவும் கூறியுள்ளது. தற்பொழுது வரை, 100 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் ஆர்டராக வந்துள்ளன எனவும் தெரிவித்து உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் கோவாக்ஸின் மருந்தானது, பரிசோதனையில் உள்ளது. இந்த பரிசோதனையினைப் போல, நாங்கள் தயாரித்து உள்ள மருந்தினையும் பரிசோதனை செய்ய, அந்நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தாங்கள் உருவாக்கியுள்ள இந்த மருந்தின் 3வது கட்ட மருத்துவப் பரிசோதனையின, இந்தியாவில் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளது. இந்த மருந்தினை உற்பத்தி செய்வதற்கான லைசென்ஸை, இந்தியாவின் ஹைதராபாத் நகரினைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் பெற்றுள்ளது. அனுமதி கிடைத்ததும், இந்தியாவில் 10 கோடி டோஸ் மருந்துகள் தயாரிக்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS