நிலவில் நிலம்! மனைவிக்கு பரிசு! ராஜஸ்தான் நபர் வெறித்தனம்!

28 December 2020 அரசியல்
rajasthancouple.jpg

நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி, தன்னுடைய மனைவிக்கு திருமண நாள் பரிசாக ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் வழங்கி உள்ளார்.

ஒவ்வொரு நபரும் தன்னுடைய மனைவியினை மகிழ்விப்பதற்காக, பிரத்யேகமாகவும் தனித்துவமாகவும் பல விஷயங்களை செய்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு செய்யாமல், யாரும் எதிர்பாராத வகையில், ராஜஸ்தான் மாநிலத்தினைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா என்ற நபர் புதிய பரிசினைத் தன்னுடைய மனைவிக்கு வழங்கி உள்ளார். இந்த நிலத்தினை Luna society international என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கி இருக்கின்றார்.

இவர் சுமார் 3 ஏக்கர் நிலத்தினைப் பதிவு செய்துள்ளக் காரணத்தால், அவருக்கு அந்த மாநிலத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளது அந்த நிறுவனம். அந்த மாநிலத்தில் இருந்து, நிலவில் முதன் முதலாக நில்வில் இடம் வாங்கியத் தம்பதியினர் என்றப் பெருமையினை அந்த தம்பதி பெற்றுள்ளது.

HOT NEWS