2 கோடியே 42 லட்சம் விண்ணப்பங்கள்! 1,40,000 பணியிடங்கள்! ரெயில்வே மெகா ஆட்சேர்க்கை!

07 September 2020 அரசியல்
railway1.jpg

வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று, இந்தியாவின் ரெயில்வேயானது ஒரு லட்சத்து 40 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்காக, மெகா தேர்வினை நடத்த உள்ளது.

இந்தியாவின் மிகப் பெரியப் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வேயில், பல லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த நிறுவனத்தில், தற்பொழுது ஒரு லட்சத்து நாற்பதாயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அந்தப் பணியிடங்களுக்கானத் தேர்வானது, வருகின்ற டிசம்பர் மாதம் 15ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை, ரெயில்வே தலைமை செயல் அதிகாரியான வினோத் குமார் யாதவ் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், இந்திய அளவில் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று, ஒரு லட்சத்து 40,000 பணியிடங்களுக்கானத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்காக, சுமார் இரண்டு கோடியே 42 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுடைய விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு, முடிவு செய்யப்பட்டு விட்டன. தற்பொழுது கொரோனா வைரஸ் பரவியுள்ள காரணத்தால் தான், வேலைக்கு ஆட்களை எடுக்க இயலவில்லை. ஏனெனில், அவர்களுக்கு நேடியாகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டி இருக்கின்றது.

இருப்பினும், யாரும் கவலைப்பட வேண்டாம். வருகின்ற டிசம்பர் மாதம் 15ம் தேதி அன்று திட்டமிட்டப்படி தேர்வு நடைபெறும். அதற்கான தேர்வு மையங்கள் மற்றும் பிற வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS